கோலாலம்பூர், டிசம்பர்-16 – தலைநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு மறியலின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர், பெண்ணை நோக்கி ஆபாச சைகைப் புரிந்ததாகக் கூறப்படுவது குறித்து உள் விசாரணை நடைபெறுகிறது.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை அடையாளம் கண்டிருப்பதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா (Datuk Rusdi Mohd Isa) கூறினார்.
வைரலான வீடியோ குறித்து புகாரேதும் வரவில்லையென்றாலும், போலீஸ் அளவில் விசாரணை நடைபெறுவதாக அவர் சொன்னார்.
மனித உரிமை தொடர்பான மறியலில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்த போது, அப்போலீஸ்காரர் தன்னை நோக்கி ஆபாச சைகைக் காட்டிய வீடியோவை பெண்ணொருவர் தனது Instagram பக்கத்தில் முன்னதாக பதிவேற்றியிருந்தார்.
தனக்கு அந்த ஆபாச சைகை புரிய வேண்டுமென்ற நோக்கில் அதனை அவர் பல முறை செய்துக் காட்டியதாகவும் அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.