பெண்ணின் சடலத்துடன் உடலுறவு பாலியல் உறவு வன்கொடுமை கிடையாது – இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடில்லி , பிப் 7 – இறந்த பெண்ணின் உடலுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமில்லை என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சடலத்துடன் உடலுறவு கொள்ளும் தன்மைக்கு நெக்ரோபிலியா என்பது அறிவியல் பெயராகும்.
கர்நாடகவில் கொலை செய்யப்பட்ட 21 வயது பெண்ணின் சடலத்துடன் ஆடவர் ஒருவர் பாலியல் உறவு கொண்டது குற்றமாகாது எனக்கூறி அந்த குற்றச்சாட்டை உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது.
எனினும் கைது செய்யப்பட்டவர் மீதான கொலை குற்றத்தை மட்டும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.
இறந்த உடலுடன் பாலியல் உறவு கொள்வது இந்திய தண்டனை சட்டத்தின் 376ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என நீதிமன்றம் விளக்கம் அளித்தது.
நெக்ரோபிலியா ஒரு மனநலக் பாலியல் கோளாறு என்பதால் அதனை தண்டிக்கும் சட்டங்களை நாடாளுன்றம் இயற்ற வேண்டிய அவசியத்தையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.