கிள்ளான், மார்ச் 3 – இரு பிள்ளைகளுக்குத் தாயான, கணவரை பிரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், நிறுவனத்தின் மேற்பார்வையாளர் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வேலையிட கிடங்கில் பொருளை அடுக்கிக் கொண்டிருந்தபோது , பெண்ணின் பிட்டத்தை , அவரது மேற்பார்வையாளர் தட்டியிருக்கிறார்.
அதன் தொடர்பில் புகார் பெறப்பட்டதை அடுத்து 35 வயது மதிக்கத்தக்க ஆடவரை சம்பம் நிகழ்ந்த அன்றைய தினமே கைது செய்ததாக , தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஜா ஹூங் ஃபொங் (Cha Hoong Fong) தெரிவித்தார்.