தாவாவ் , பிப் 24 – பெண்கள் அணியும் இரவு உடை மற்றும் தலை அங்கியை அணிந்துகொண்டு ஒரு வீட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிய ஆடவர் பிடிபட்டார்.
Tawau, Taman Ria விலுள்ள அந்த வீட்டில் புகுந்த 35 வயதுடைய ஆடவர் அங்கிருந்து வெளியேறி தப்பியோட முயன்றபோது பொதுமக்கள் உதவியோடு பிடிபட்டார். தாம் வீடு வந்து சேர்ந்தபோது தமது வீட்டிற்கு வெளியே ஒரு ஜோடி செருப்பு இருந்ததைக் கண்டு புகார்தாரரான 18 வயது பெண் அதிர்ச்சி அடைந்ததாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Peter Umbuas கூறினார்.
வீட்டிற்குள் புகுந்த தம்மை கண்டதும் அந்த ஆடவர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். எனினும் பொதுமக்களின் உதவியோடு அவர் பிடிக்கப்பட்டார்.
கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்படும் 150 ரிங்கிட் மதிப்புடைய அலங்கார பொருட்களும் அந்த ஆடவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக Peter Umbuas தெரிவித்தார்.