Latestமலேசியா

பெண் ஆசிரியையை முகத்தில் குத்தி கொள்ளையடித்த 3 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், மார்ச் 8 – கடந்த பிப்ரவரி 25 -ஆம் தேதி,செந்தூல் Taman Pelangi -யில் , வீடொன்றில் ஆசிரியை-யைக் காயப்படுத்தி, கொள்ளையிட்டுச் சென்ற 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

அந்த சம்பவத்தில் , பாதிக்கப்பட்ட 45 வயது பெண், முகத்தில் குத்தப்பட்டதோடு , கழுத்திலும் தாக்கப்பட்டு, கம்பியினால் கட்டிப் போடப்பட்டார்.

அப்பெண்ணைத் தாக்கிய போலீசார் 6,000 ரிங்கிட் ரொக்கத்தையும், கைபேசியையும், வங்கி அட்டையையும் திருடிச் சென்றதாக, செந்தூல் போலீஸ் தலைவர் Beh Eng Lai தெரிவித்தார்.

அந்த கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து , கடந்த ஞாயிற்றுக்கிழமை, டாமான்சாரா, பெட்டாலிங் ஜெயா பகுதிகளில், 26 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்களைக் கைது செய்ததாக அவர் கூறினார்.

பல்வேறு பழைய குற்றப் பதிவுகள் இருக்கும் அவர்களின் கைது நடவடிக்கையை அடுத்து, தலைநகரில் 4 கொள்ளைச் சம்பவங்களுக்கும் , சிலாங்கூரில் ஒரு கொள்ளைச் சம்பவத்துக்கும் தீர்வு காணப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!