ஜோகூர் பாரு, பிப் 18 – பெண் குழந்தையை அமர வைத்துக்கொண்டு ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் குறித்து காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சுமார் 36 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளி தொடர்பாக 20 வயதுக்குட்பட்ட ஆடவன் கைது செய்யப்பட்டதை வட ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Rupiah Wahid உறுதிப்படுத்தினார்.
தவறான பதிவு எண, தலைக்கவசம் அணியாமல் இருந்தது மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான சாலை வரியை எடுக்காமல் இருந்தது போன்ற மூன்று குற்றங்களுங்காக அந்த ஆடவருக்கு குற்றப் பதிவு வழங்கப்பட்டதாக Rupiah Wahid தெரிவித்தார்.