
கோலாலம்பூர், ஜன 2 – போட்டியின் போது புள்ளிகள் குறைந்ததற்காக இரு பெண் விளையாட்டாளர்களை அறைந்த பயிற்றுநரை, மலேசிய கைப்பந்து சங்கம் இடைநீக்கம் செய்திருக்கிறது.
14 வயதுக்கு கீழ்பட்ட மலாக்கா அணிக்கான அந்த பயிற்றுநர் மீதான விசாரணை முடிவுறும் வரையில், தேசிய நிலையிலான எந்தவொரு போட்டிகளிலும் ஈடுபட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக , அச்சங்கம் தெரிவித்தது.
முன்னதாக, கடந்த டிசம்பரில் ஜோகூர்,கோத்தா திங்கியில் நடைபெற்ற இளையோருக்கான கைப்பந்து போட்டியில் இரு பெண் விளையாட்டாளர்களை அவர்களின் பயிற்றுநர் அறைந்த காணொளி , சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட பலரது கண்டனத்தை பெற்றிருக்கின்றது.