பெத்தோங், செப்டம்பர்-9 – சரவாக், பெத்தோங்கில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரேய்லர் லாரியை அம்புலன்ஸ் வண்டி மோதியதில், அதன் ஓட்டுநரும், தாதி ஒருவரும் படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலை 4.20 மணியளவில் அவ்விபத்து நிகழ்ந்தது.
டிரேய்லர் லாரியின் பின்பகுதியை அம்புலனஸ் மோதியதில் இருவரும் வண்டிக்குள் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்பு மீட்புப் படை வருவதற்குள், அங்கிருந்த பொது மக்கள் இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.
அம்புலன்ஸ் ஓட்டுநர் ஸ்ரீ அமான் மருத்துவமனைக்கும், தாதி பெத்தோங் மருத்துவமனைக்கும் கொண்டுச் செல்லப்பட்டனர்.