கோலாலம்பூர், பிப் 3 – நெஞ்சு வலிப்பதாக கூறிய கைதி ஒருவர் குவந்தான் Penor சிறையில் மரணம் அடைந்தார். 38 வயதுடைய அந்த கைதி அபாயகரமான போதைப் பொருள் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணைக்காக Indera Mahkota மத்திய தடுப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டார். வெள்ளிக்கிழமை நெஞ்சு வலிப்பதாக புகார் கூறியதைத் தொடர்ந்து அந்த கைதி சிகிச்சைக்காக குவந்தான் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். காச நோய் காரணமாக அந்த கைதி மரணம் அடைந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் போலீசிடம் தெரிவித்தனர் என புக்கிட் அமான் உயர் நன்னெறிக் கழகத்தின் இயக்குனர் Azri Ahmad தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அந்த கைதியின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என்றும் அவர் கூறினார். இவ்வாண்டு தடுப்புக் காவலில் மரணம் அடைந்த ஆறாவது நபர் அந்த கைதியாவார்.