
அமெரிக்கா, பென்சில்வேனியாவில், தீபாவளி தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை பொது விடுமுறை நாளாக அறிவிக்கும் சட்ட மசோதாவுக்கு, பென்சில்வேனியா மாநில சட்டமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, செனட்டர் நிகில் சவால் ட்விட் செய்துள்ளார்.
தீபாவளியை பொது விடுமுறை நாளாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவிற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு வழங்கியதாகவும் நிகில் பதிவிட்டுள்ளார்.
பென்சில்வேனியாவில் வசிக்கும் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோரில், சுமார் இரண்டு லட்சம் பேர் அமெரிக்க இந்தியர்கள் ஆவர். அவர்கள் ஆண்டுதோறும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாகும்.