Latestமலேசியா

பெய்ஜிங்கில் ஆசிரியரால் இரும்பு அடிக்கோளால் தாக்கப்பட்ட மாணவி; மண்டை ஓடு உடைந்ததால் அறுவை சிகிச்சை

பெய்ஜிங், செப் 19 – ஆசிரியர் இரும்பு அடிக்கோளால் அடித்ததன் விளைவாக, சீனாவில் ஒன்பது வயது மாணவி ஒருவருக்கு மன்டை ஓடு உடைந்து அவசர அறுவை சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்டது
கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி நிகழ்ந்த இச்சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
சம்பந்தப்பட்ட ஆசிரியர், இரும்பு அடிக்கோளால் அடித்ததன் விளைவாக அம்மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த ஆசிரியர் அம்மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சோதனையில், மாணவிக்கு சிராய்ப்பு காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும் பெற்றோரின் அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால், பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர் மகளுக்கு முழு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் முழு பரிசோதனை மேற்கொள்ளபட்டபோது அம்மாணவியின் மண்டை ஓடு உடைந்திருப்பதும், தலையில் எலும்புத் துண்டுகள் இருந்ததையும் மருத்துவர்கள் கண்டு பிடித்ததோடு , உடனடியாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் அம்மாணவி இருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இச்சம்பவம் போலிசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!