பெய்ஜிங், அக்டோபர்-29, சீனா, பெய்ஜிங்கில் பொது இடத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது 5 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் மூவர் வயது குறைந்த சிறார்கள் ஆவர்.
திங்கட்கிழமை பிற்பகலில் Haidian மாவட்டத்தில் வீதியில் நடந்து சென்றவர்களை மர்ம நபர் கத்தியால் தாக்கியதாக, Xinxua செய்தி நிறுவனம் கூறியது.
காயமடைந்த ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல்காரன் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.