
கோலாலம்பூர், மார்ச் 13 – பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியிலிருந்து பாஸ் விலகக்கூடும் என்று வெளியான தகவலை அக்கட்சியின் துணைத்தலைவரான துவான் Ibrahim Tuan Man மறுத்தார். இப்படியொரு செத்தியை தாம் கேள்விப்படவில்லை இன்று நடாளுமன்ற கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார். பெர்சத்து கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் பாஸ் கட்சியின் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் விலகக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளன .