Latestமலேசியா

பெரிக்காத்தான் நேசனலின் அசல் தலைவராக்க டாக்டர் மகாதீரை பாஸ் கட்சி விரும்புகிறது.

கோலாலமபூர், செப் 25 – பெரிக்காத்தான் நேசனலின் அசல் தலைவராக்குவதற்காக டாக்டர் மகாதீரை பாஸ் கட்சி விரும்புகிறது என முன்ளான் கூட்டரசு அமைச்சரான டத்தோ சாலே சைட் கெருக் கூறியுள்ளார். அரசியலில் டாக்டர் மகாதீரை முன்னிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அந்த நடவடிக்கை விவேகமான ஒன்று என அவர் தெரிவித்தார். மகாதீரை எதிர்க்கட்சி தலைமையிலான மாநிலங்களின் குழுவிற்கு அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக நியமிக்கும் பெரிக்காத்தான் நேசனல் மேற்கொண்ட நடவடிக்கை ஆக்கப்பூர்வமானது என்றும் சாலே சைட் கெருக் வருணித்தார். இந்த மாத தொடக்கத்தில் மகாதீருக்கும் பாஸ் (PAS) கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அழைக்கப்படாதற்கான காரணத்தையும் சாலே சைட் கெருக் வினவினார்.

கடந்த ஆண்டு 15வது பொதுத் தேர்தலில், மகாதீர் தனது லங்காவி தொகுதியில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் சுஹைமி அப்துல்லாவிடம் தோல்வி கண்டது அரசியல் பின்னடைவை மகாதீர் சந்தித்தார். முஹிதினுக்கு “வரையறுக்கப்பட்ட விருப்பங்கள்” இருப்பதாகவும், கூட்டணி முன்னோக்கிச் கொண்டு செல்வதற்கு மகாதீர் ஆற்ற வேண்டிய பங்கை முஹிடின் ஆதரிக்க வேண்டும் என்றும் சாலே சைட் கெருக் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!