
கோலாலம்பூர், ஜன 24 – பெருத்த வயிறு கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காரில் இருந்து வெளியேற கஷ்டப்படும் காணொளி வைரலாகி, பருமனான அவரது உடல் எடை குறித்து சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
உடற் பருமனாக இருக்கும் அந்த போலீஸ் அதிகாரியால் , திருடனை ஓடிப் பிடிக்க முடியுமா ? அந்த போலீஸ் அதிகாரி காரில் இருந்து வெளியேறுவதற்கு முன்பே, திருடன் தப்பித்து ஓடி விடுவான் என பலரும் கிண்டலாக பேசியுள்ளனர்.
இவ்வேளையில், போலீஸ் அதிகாரியின் அந்த உடல் எடை குறித்து சிலர் வேதனையை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில், ஓய்வு பெறும் வரையில் ஒரு போலீஸ் அதிகாரியில் உடல் கட்டுக் கோப்புடன் இருந்து சமூகத்திற்கு அவர் ஒரு முன்னூதாரணமாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வேளையில் , சம்பந்தப்பட்ட காணொளியில் , Lans Koperal பதவி கொண்ட அந்த போலீஸ் அதிகாரி, தனது ரோந்து காரில் இருந்து வெளியேறி, இளைஞர் ஒருவருக்கு சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை கூறுவதைக் காண முடிகிறது.