Latestமலேசியா

பெரும்பாலான அரசியல்வாதிகள் உடல்நலப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்; முகக் கவசம் அவசியம்

கோலாலம்பூர், அக் 23- உணவு உண்ணும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் சமயங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார்.
என் சக அரசியல் தோழர்கள் முகக்கவசம் அணியாமல் சந்திப்புகள், கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். அவர்களில் பலர் நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற உபாதைகளுக்கும் உடல் பருமனுக்கும் ஆளாகியிருக்கின்றனர்.
கட்டாயம் முகக்கவசம் அணியும் விதிமுறை பொதுமக்களுக்கு மட்டுமல்ல. அரசியல் தலைவர்களும் அதனைப் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, இரு தடுப்பூசி போட்டதைக் காரணங் காட்டி அரசியல் தலைவர்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்கக் கூடாது என கைரி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!