வாஷிங்டன் , பிப் 4 – ஐ.எஸ் தீவிரவாதி கொல்லப்பட்டதன் வாயிலாக உலகிற்கு பெரும் மிரட்டலாக இருந்த தீவிரவாதியின் சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் Joe Biden கூறினார். சிரியாவில் ஐ. எஸ் தீவிரவாதிகளின் தலைமறைவு இடத்தில் அமெரிக்க சிறப்பு படைகளின் ஹெலிகாப்டர் சூழ்ந்ததைத் தொடர்ந்து அந்த ஐ.எஸ் தீவிரவாதி தன்னைத் தானே உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக Joe Biden தெரிவித்தார்.
பெரிய அளவில் சேதம் ஏற்படுவதை தடுப்பதற்காக விமானம் வாயிலாக குண்டு வீச்சு தாக்குதல் நடத்துவதைவிட தவிர்த்துவிட்டு துருப்புக்கள் பயன்படுத்தும்படி தாம் உத்தரவிட்டிருந்தாக Biden கூறியிருந்தார். .