
லீமா , ஜன29 – பெருவில் 60 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் மரணம் அடைந்தனர். அந்த பஸ் நல்ல நிலையில் இருந்தபோதிலும் மோசமான சாலையின் காரணமாக அது விபத்துக்குள்ளானதாக தொடக்க கட்ட விசாரணையில் தெரிவதாக அதிகாரிகள் கூறினர். பெருவில் பொது போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் அண்மைய காலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.