Latestஉலகம்

பெரு அதிபர் பதவி விலகும்படி மக்கள் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அதிபர் Pedro Castillo பதவி விலகக்கோரி மேற்கொள்ளப்பட்ட இரத்தக் களரி மோதல்களில் குறைந்தது 42 பேர் பலியானதை கண்டித்து தலைநகர் lima – வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் அளவிலான மக்கள் கலந்துகொண்டனர். நடப்பு அதிபர் Dina Boluarte – வும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். சவப் பெட்டிகள், மற்றும் கலவரத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களையும் ஏந்திக்கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் Dina Boluarte – க்கு எதிராக கடுமையான கண்டன கோஷங்களையும் அவர்கள் வெளிப்படுத்தினர். அமைதியாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!