
கோலாலம்பூர், பிப் 1 – பெர்சத்து கட்சியின் கணக்கை 2 வாரங்களுக்கு மேலாக எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியுள்ளது. இதனை எம்.ஏ.சி.சியின் ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பில் எம்.ஏ.சி.சியின் விசாரணை தொடர்வதோடு விசாரணைக்கு உதவியாக சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.