கோலாலம்பூர், பிப் 2 – பெர்சத்துவிலிருந்து டத்தோ சுரைடா கமாருடின் விரைவில் நீக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சருமான சுரைடாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். PBM எனப்படும் பார்ட்டி பங்சா மலேசியாவில் சுரைடா தொடர்பு வைத்துள்ளதால் அவர் மீது பெர்சத்துவின் உச்ச மன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் சுரைடாவை கட்சியிலிருந்து நீக்குவதது தொடர்பான இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லையென இணையத்தள பதிவேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கட்சியிலிருந்த சுரைடாவை நீக்க வேண்டும் என பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த பரிந்துரைக்கு பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.