
புத்ரா ஜெயா, பிப் 2 – பெர்சத்து கட்சியின் கணக்கை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியதில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் கிடையாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார். மலேசியாவில் விசாரணை அமைப்புகள், அமலாக்கம் நிறுவனங்கள் மற்றும் நிதிமன்றங்கள் சுயேச்சையாக தொடர்ந்து செயல்பட்டு வருவதோடு எந்தவொரு தரப்பினரின் கீழ் இல்லையென அவர் கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் நெருக்குதல் கொடுப்பதாக கூறும் குற்றச்சாட்டு பொறுப்பற்றத்தமனாக இருப்பதாக இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் தெரவித்தார். பெர்சத்து கட்சியின் கணக்கை எம்.ஏ.சி.சி முடக்கியிருக்கும் நடவடிக்கைக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என அன்வார் வலியுறுத்தினார். எம்.ஏ.சி மற்றும் போலீஸ் ஆகிய தரப்புகள் தங்களுக்கு கிடைக்கும் புகார் அடிப்படையில்தான் விசாரணையை மேற்கொள்கின்றனர். அந்த அடிப்படையில்தான் பெர்சத்து கட்சியின் கணக்கை எம்.ஏ.சி.சி முடக்கியிருக்கலாம் என அன்வார் கூறினார்.