செப்பாங், நவம்பர்-29 – முறையான ஏற்றுமதி பெர்மிட் எதுவும் இல்லாமல் 3 புறாக்களை கொண்டுச் செல்ல இந்தோனீசிய ஆடவர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி, KLIA 2-ல் முறியடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17-ஆம் தேதி காலை 6 மணியளவில் புறப்பாடு மையத்தில் வழக்கமான பரிசோதனை மேற்கொண்ட போது, Maqis எனப்படும் மலேசியத் தனிமைப்படுத்தல் சேவை மற்றும் சோதனை அமுலாக்கத் துறை அதனை கண்டுபிடித்தது.
Maqis-சின் ஏற்றுமதி பெர்மிட் போன்று எந்தவொரு முறையான அனுமதி ஆவணமும் அவ்வாடவரிடம் காணப்படவில்லை.
விவசாயப் பொருள் எதனையும் Maqis பெர்மிட் இல்லாமல் ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றமாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 100,000 ரிங்கிட் அபராதம் மற்றும் ஆறாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.