
பெசூட், நவம்பர் 8 – திரங்கானு, குவாலா பெசூட்டிலுள்ள, பெர்ஹெண்டியான் தீவிற்கு அருகே, ரவா தீவின் கடல்பகுதியில், அழுகிய நிலையில், மிதந்து கொண்டிருந்த ஆடவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் வாக்கில், குவாலா பெசூட் கடல்பகுதியில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் குழுவால் அந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
“டி-சர்ட்” அணிந்திருந்த அந்த ஆடவரின் உடல் அழுகி சிதையும் நிலையில் இருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக, பெசூட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அப்துல் ரோசாக் முஹமட் தெரிவித்தார்.
அதனால், சம்பந்தப்பட்ட ஆடவர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதே சமயம், உடல்கூறுகள் அடிப்படையில், உயிரிழந்தவர் அந்நிய சுற்றுப்பயணியாக இருக்கலாம் எனவும் போலீஸ் சந்தேகிப்பதாக அப்துல் ரோசாக் கூறியுள்ளார் .