
குவாலா திரங்கானு, நவம்பர் 9 – பெர்ஹெண்டியான் தீவில், கட்டுமானத்தில் இருந்த உல்லாசத் தங்கும் விடுதி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், நான்கு மியன்மார் தொழிலாளர்கள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று காலை மணி 7.30 வாக்கில், இதர நான்கு தொழிலாளர்களுடன் அவர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவத்தில் உயிர் பிழைத்த நான்கு தொழிலாளர்கள் உடனடியாக, பெர்ஹெண்டியான் தீவின் சுகாதார கிளினிக்குக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலில் கொந்தளிப்பு காணப்படுவதால், பெர்ஹெண்டியான் தீவில் நுழைவதற்கு, ஆகாயப் படையின் உதவிக் கோரப்பட்டுள்ளதாக, திரங்கானு மாநில தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.