நெகிரி செம்பிலான், செப்டம்பர் 3 – முதன் முறையாக நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடன் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பெற்றோர் ஆசிரியர் சங்க சுழற்கிண்ணக் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இம்முறை பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 9 தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதித்து பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
சுற்றுவட்டார பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பகிர்ந்து கொள்ளவும், அப்பள்ளிகளுக்குத் தேவைப்படும் உதவிகளைக் கண்டறியும் வகையிலும், இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் லோகன் தெரிவித்தார்.
Interview
இம்முறை நடைபெற்ற இப்போட்டியின் வாயிலாகச் சேகரிக்கப்பட்ட நிதி, தேவைப்படும் பள்ளிகளுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தப்படும் என பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் விளையாட்டு பிரிவு தலைவர் வசந்த் (Vasanth) கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியை, அதிகாரப்பூர்வமாக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் மற்றும் பயிற்றுநர் டேவன் (Devan) துவக்கி வைத்தனர்.