சிரம்பான், ஏப்ரல்-28, நெகிரி செம்பிலான், சிரம்பானில் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம், 5 வயது பெண் குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இடது தொடை முறிவுக்கு ஆளாகியுள்ளாள்.
அச்சம்பவம், சனிக்கிழமை காலை 9.20 மணியளவில் Taman College Height அடுக்குமாடியில் நிகழ்ந்தது.
வீட்டில் மேலும் 2 உடன்பிறப்புகளோடு இருந்த அக்குழந்தை, பின்னால் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த போது தவறி விழுந்தாள்.
சத்தம் கேட்டு போய் பார்த்த போய் அக்குழந்தை ரத்தக் காயங்களுடன் வலியில் துடித்ததாக அண்டை வீட்டுக்காரர் சொன்னார்.
அக்குழந்தையின் குடும்பம் அண்மையில் தான் அங்குக் குடியேறியதாகத் தெரிகிறது.
அச்சம்பவம் 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறிய போலீஸ், அக்குழந்தையின் பெற்றோரிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்படும் என்றது.
கொஞ்ச நேரமே என்றாலும் கூட, வீட்டில் சிறுபிள்ளைகளைத் தனியே விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு அது ஆலோசனைக் கூறியது.