
சிப்பாங், மார்ச் 21 – சைபர் ஜெயாவிலுள்ள Pelita Nasi Kandar உணவகத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது, அதன் ஊழியர் ஒருவரை தாக்கியது , கொச்சை வார்த்தைகளை பேசியது, மற்றும் பொருட்களை நாசப்படுத்தியதாக இளங்கோவன் முனியாண்டி மீது மற்றும் வெங்கடேஸ்வரன் மலைச்சாமி ஆகிய இரண்டு நண்பர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் Ayuni Izzaty Sulaiman முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 51 வயதுடைய இளங்கோவனும் வெங்கடேஸ்வரனும் மறுத்தனர். வேன் ஓட்டுனரான இளங்கோவன் மீது நான்கு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்ட வேளையில் டாக்சி ஓட்டுனரான வெங்கடேஸ்வரனுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. இளங்கோவனுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுக்களுக்கும் 11, 600 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்ட வேளையில் வெங்கடேஸ்வரனுக்கு 8,600 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவ்விருவருக்கு எதிரான வழக்கு விசாரணைமே 10 ஆம் தேதி நடைபெறும் .