
பெல்கிரேட், மே 3 – பெல்கிரேட் பள்ளியிலுள்ள வகுப்பறையில் இன்று காலை 14 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வகுப்பு ஆசிரியர் உட்பட 9 பேர் மாண்டனர். அந்த சம்பவத்தில் பாதுகாலர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஐந்து மாணவர்கள் காயம் அடைந்தனர். அநத மாணவன் முதலில் தனது வகுப்பு ஆசிரியரை சுட்ட பின்னர் பிறகு கண்மூடித்தனமாக மற்றவர்களை நோக்கி சுட்டதாக அந்த சம்பவத்தின்போது உயிர் தப்பிய மாணவி ஒருவர் தெரிவித்தார்.