
ஈப்போ, செப் 9 – சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலாகக் கடுமையான மழை பெய்ததைத் தொடர்ந்து தஞ்சோங் மாலிம், பெஹ்ராங் , கம்போங் சிங்கோங்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 433 பேர் தற்காலிக நிவாரண மையத்திற்கு வெளியேற்றப்பட்டனர். 85 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் நேற்றிரவு 7.30 மணி முதல் கம்போங் சிங்கோங்கில் உள்ள பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக Muallim மாவட்ட பேரிடர் நிர்வாக குழுவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சுங்கை பெஹ்ராங் ஆற்று நீர் கரைபுரண்டோடியதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகமாகத் திறக்கப்பட்ட நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.