Latestமலேசியா

பேக்கட் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் நிலைநிறுத்தியிருக்கிறது; பிரதமர்

கோலாலம்பூர், ஜூன் 22 – அரசாங்கம் 400 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் பேக்கட்டில் விற்கப்படும் 1 கிலோ சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகை நிலைநிறுத்தியிருப்பதாக , பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

நாட்டில் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் முழுமையாக மீட்டுக் கொள்ளவிருப்பதாக மக்கள் மத்தியில் கவலையும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. அதையடுத்து , பேக்கட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் தொடர்ந்து வழங்குமென , இன்று நேரலை ஒளிபரப்பின்போது பிரதமர் விளக்கம் அளித்தார்.

இதனிடையே, கோவிட் காலத்தில் மக்களின் சுமையைக் குறைப்பதற்காகவே அரசாங்கம் 2 கிலோவிலிருந்து 5 கிலோ வரையிலான போத்தல் சமையல் எண்ணெய்க்கான தற்காலிக உதவித் தொகையை அறிவித்தது.

எனினும் தற்போது பொருளாதார மீட்சிப் பெற தொடங்கியிருப்பதுடன், சமையல் எண்ணெய் கடத்தலை முறியடிக்கவும் , போத்தல் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் மீட்டுக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக பிரதமர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!