Latestஉலகம்

பேங்காக் ஆடம்பர ஹோட்டலில் அறுவர் மரணத்திற்கு காரணமான சந்தேகப் பேர்வழி துபாய் கோடிஸ்வரரின் மனைவியா ?

பேங்காக், ஆக 14 – பேங்காக்கிலுள்ள ஆடம்பர ஹோட்டல் அறை ஒன்றில் ஜூலை 16 ஆம் தேதி வியட்னாம் பிரஜைகள் அறுவர் சைனட் விஷம் கொடுக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில் முக்கிய சந்தேகப் பேர்வழி தம்மை துபாய் கோடிஸ்வரரின் மனைவி என்று கூறிக்கொண்ட பெண் என தெரியவந்துள்ளது. அந்த சம்பவத்தில் மரணம் அடைந்த ஒப்பனை கலைஞரனான 37 வயது டிரன் டின் பூ ( Tran Dinh Phu ) என்பவரின் தாயார் மூலம் இந்த புதிய விவரம் தெரியவந்துள்ளது.

அந்த ஹோட்டல் அறையில் சைனட் கலக்கப்பட்ட தேநீரை அருந்தியதால் இறந்த ஆறு வியட்னாமியர்களில் டிரன் மற்றும் ஷேரின் சோங் ( Sharine Chong) அடங்குவர். அவர்கள் அறுவரும் மர்மமான முறயில் ஜூலை 16ஆம் தேதி இறந்து கிடந்ததை ஹோட்டல் அறையை தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் கண்டறிந்தனர். இச்சம்பவத்தை கொலை மற்றும் கூட்டு தற்கொலை என்பதோடு இதனை 56 வயதுடைய சோங் மேற்கொண்டதாக போலீசார் முடிவுக்கு வந்தனர். அந்த கும்பலில் உள்ள ஒரு தம்பதியை ஜப்பானில் மருத்துவமனை கட்டும் திட்டத்தில் முதலீடு செய்யும்படி சோங் வலியுறுத்தி வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டுகிறது. இந்த திட்டத்தில் அந்த தம்பதிக்கு 10 மில்லியன் பாட் அல்லது 278,000 அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இறந்தவர்களில் 55 வயது Dang Hung Van மற்றும் Chong ஆகியோர் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமையை வைத்திருந்தவர்கள் என பேங்காக் போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!