
கோலாலம்பூர், ஆக 30 – பேங்க் நெகாரா எனப்படும் நாட்டின் மத்திய பொருளகத்தின் துணை கவர்னராக Adnan Zayani யை நிதியமைச்சு அங்கீகரித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து மூன்று ஆண்டு தவணைக்கு அவரது நியமனம் அமலுக்கு வருவதாக பேங்க் நெகாரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிதி சந்தைகள் மற்றும் மேம்பாட்டு துறைகளை Adnan Zaylani கண்காணிப்பார்.
பேங்க் நெகாராவின் இயக்குனர் வாரிய உறுப்பினராகவும் இருக்கும் அவர் அப்பொருளகத்தின் நிர்வாகக் குழு, நாணய கொள்கை குழு மற்றும் நாணய கையிருப்பு குழுவிலும் இடம் பெற்றிருப்பார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொது கொள்கை முதுகலை பட்டதாரியான Adnan Zaylani 1994 ஆம் ஆண்டு பேங்க் நெகாராவில் இணைந்தார். கடந்த 26 ஆண்டுகாலமாக பேங்க் நெகாராவில் அவர் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.