ஷா ஆலாம், ஏப்ரல்-30 – சிலாங்கூர், ஷா ஆலாமில் Bukit Jelutong டோல் சாவடி அருகே, Elite நெடுஞ்சாலையில் 1 டன் லாரி இன்று தீயில் அழிந்தது.
பேட்டரிகளை ஏற்றியிருந்த அந்த லாரி இன்று நண்பகல் வாக்கில் ஏற்பட்ட தீயில், 100 விழுக்காடு எரிந்துப் போனது.
நல்லவேளையாக, தீ ஏற்பட்ட போது லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் லாரியில் இல்லை என சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
தீக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் நிலையமொன்றின் அருகே, தீயில் எரிந்துக் கொண்டிருக்கும் லாரியில் இருந்து அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்படுவது முன்னதாக வைரலான காணொலிகளில் தெரிந்தது.