Latestஉலகம்

பேரங்காடியின் நிர்வாகி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அறுவர் மரணம்

வாஷிங்டன், நவ 24 – அமெரிக்காவில் Virginia- விலுள்ள வால்மாட் பேரங்காடியில் ஓய்வு நேரத்தில் ஊழியர்களின் அறையில் புகுந்த அந்த பேரங்காடியின் நிர்வாகி Andre Bing கண்மூடித்தனமாக சுட்டதில் அறுவர் மாண்டனர். அதன்பிறகு அந்த நிர்வாகி தன்னை தானே சுட்டுக்கொண்டதால் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த நிர்வாகி தனது ஊழியர்களை நோக்கி சுட்டதை இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். 31 வயதுடைய அன்ரே பிங் Virginia- வின் Chesapeake நகரைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். என் கண் முன்னாலேயே சக ஊழியர்களில் மூவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளானதாக அந்த பேரங்காடியின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!