சிகமாட், பிப் 10 – திங்கட்கிழமையன்று ஜாலான் சிகமாட் – குவந்தான் சாலையிலுள்ள பேரங்காடிக்குள் உள்ளேயிருந்த ஏ.டிஎம் பணப் பட்டுவாடா இயந்திரம் உடைக்கப்பட்டது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்.
பூலோ கசாப் வீடமைப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து அந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ Kamarul Zaman Mamat தெரிவித்தார்.
அந்த இருவரில் ஒருவன் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த சம்பவத்திற்கு பின்னனியாக இருந்துள்ளான் என்றும் தெரியவந்தாக அவர் கூறினார். விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த பேரங்காடியின் மூன்று பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டனர்.
அந்த ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு தீவைக்கப்பட்டிருந்த போதிலும் அதிலிருந்த 77,000 ரிங்கிட்டை கொள்ளையடிப்பதில் கொள்ளையர்கள் தோல்வி கண்டதாக Kamarul Zaman தெரிவித்தார்.