
கோலாலம்பூர், மே 16 – ரவாங் புக்கிட் செந்தோசாவிலுள்ள Lotus பேரங்காடியில் கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாக நேற்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் இரண்டு காணொளிகள் வெளியானது தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். உண்மையில் அந்த பேரங்காடியில் 33 வயது சந்தேகப் பேர்வழி ஒருவர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதன் தொடர்பில் பொதுமக்களால் கைது செய்யப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Faizal Tahrim தெரிவித்தார். ஆனால் அந்த பேரங்காடியில் கடந்ததல் நடந்ததாக காணொளியை வெளியிட்ட நபரை தேடி வருவதோடு 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் அந்த நபருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே வேளையில் அந்த பேரங்காடியில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் அதன் ஊழியர் ஒருவர் நேற்று நண்பகல் மணி 1.07 அளவில் போலீசில் புகார் செய்திருப்பதாக Ahmad Faizal வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.