
கோலாலம்பூர், ஜனவரி-18 – 6 நாட்களுக்கு முன் பேரங்காடியின் கழிவறையில், பிறந்த பெண் சிசுவை வீசியதாக, ஜப்பானியப் பெண் நேற்று கோலாலம்பூரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
எனினும் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 36 வயது Noda Junko மறுத்து விசாரணைக் கோரினார்.
ஜனவரி 12-ஆம் தேதி ச்செராசில் உள்ள ஒரு பேரங்காடியின் பெண்கள் கழிவறையில் அக்குற்றத்தைப் புரிந்ததாக அப்பெண் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஈராண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் 6,000 ரிங்கிட் மற்றும் 2 நபர் உத்தரவாதத்துடன் அப்பெண்ணை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், மார்ச் 27-ல் வழக்கு செவிமெடுப்புக்கு வருமென்றது.