
அமெரிக்கா, நோர்த் அலபாமா பேரங்காடி கழிவறையை பயன்படுத்திய ஆடவர் ஒருவரை, தமது கைப்பேசியில் இரகசியமாக பதிவுச் செய்த 19 வயது இளைஞனுக்கு, ஈராயிரத்து 500 அமெரிக்க டாலர் அல்லது 11 ஆயிரத்து 443 ரிங்கிட் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மே 21-ஆம் தேதி, அச்சம்பவம் நிகழ்ந்தது. கழிவறையிலுள்ள, தனிநபர் முகப்பு ஒன்றை பயன்படுத்திக் கொண்டிருந்த ஆடவர், திடீரென அடுத்த முகப்பிலிருந்து, கீழ் பகுதி வழியாக கைப்பேசியில் தாம் இரகசியமாக பதிவுச் செய்யப்படுவதை கண்டு அதிர்ந்தார்.
அதனால், சினமடைந்த அவ்வாடவர் கூச்சலிட்டதை தொடர்ந்து, அந்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
எனினும், பின்னர் அவ்வாடவர் போலீஸ் புகார் செய்ததோடு, அவர் வழங்கிய அங்க அடையாளங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞன் கைதுச் செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டான்.