
கோலாலம்பூர், செப்டம்பர் 18 – “மலேசியாவை காப்பாற்றும்” அமைதிப் பேரணியில் பங்கேற்ற 25 பேரில், இன்று நண்பகல் வரை பத்து பேரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
அதில், முஹாபாகாட் நேஷனல் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ துன் பைசால் இஸ்மாயில் அசிஸ், பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் நுருல் பட்சிலா கமாலுடின், தாமான் மெடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின் ஆகியோரும் அடங்குவர்.
தலைநகர், டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில், காலை மணி 10.30 தொடக்கி நண்பகல் மணி 12.30 வரையில், ஒன்பது பேரிடமிருந்து போலீஸ் வாக்குமூலம் பதிவுச் செய்தது.
வாக்குமூலம் அளிக்கும் நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்றதாக, துன் பைசால் கூறினார்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை, தலைநகர், சோகோ பேரங்காடிக்கு முன்புறம் நடைபெற்ற “மலேசியாவை காப்பாற்றும்” பேரணியில் பங்கேற்ற 25 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக, டாங் வாங்கி போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நோர் டெல்லான் யாஹ்யா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.