Latestவிளையாட்டு

2026 உலக கிண்ண இறுதியாட்டம்; நியூயார்க்கில் நடைபெறும்

நியூயார்க், பிப்ரவரி 5 – 2026 உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தின், இறுதியாட்டம், அமெரிக்கா, நியூயார்க்கில், நடைபெறுமென, சர்வதேச காற்பந்தாட்ட கூட்டமைப்பான FIFA கூறியுள்ளது.

48 நாடுகள் பங்கேற்கும், 2026 உலக கிண்ண காற்பந்தாட்டத்தை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ஏற்று நடத்துகின்றன.

அதன் உச்ச கட்டமாக, இறுதி ஆட்டத்தை ஏற்று நடத்தும் சவாலில், டல்லாஸ் நகரை பின்னுக்கு தள்ளி, அந்த வாய்ப்பை நியூயார்க் பெற்றது.

2026-ஆம் ஆண்டு, ஜூன் 11-ஆம் தேதி, மெக்சிகோ, அஸ்டெகா அரங்கில், 2026 உலக கிண்ண காற்பந்தாட்டத்தின் முதல் அல்லது தொடக்க ஆட்டம் தொடங்கும்.

அதனை தொடர்ந்து, கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிலுள்ள, 16 அதிநவீன அரங்குகளில், அடுத்தடுத்து மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும்.

ஒட்டு மொத்த உலக மக்களையும் கட்டி போட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட 2026 உலக கிண்ண காற்பந்தாட்டம் மெக்சிகோ, அஸ்டெகா அரங்கில் தொடங்கி, அமெரிக்கா, நியூயார்க்கில் முடிவுறும்.

அதன் வாயிலாக, புதிய சாதனையை படைக்க முடியும் என்பதோடு, மறக்க முடியாத பாரம்பரியத்தையும் அது ஏற்படுத்துமென FIFA நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2026 உலக கிண்ண காற்பந்தாட்டத்தின் அரையிறுதி சுற்று ஆட்டங்களை அட்லாண்டாவும், டல்லாஸ்சும் ஏற்று நடத்தவுள்ள வேளை ; மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணியை தீர்மானிக்கும் ஆட்டம் மியாமியில் நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!