Latestமலேசியா

பேராக்கில் உள்ள சாலைக்கு துன் சாமிவேலுவின் பெயர் சூட்டப்பட்டது

கோலாலம்பூர் , மார்ச் 29 – ஈப்போவிலிருந்து பட்டவொர்த்தை இணைக்கும் 9. 3 கிலோமீட்டர் தூர சாலைக்கு , மறைந்த துன் சாமிவேலுவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

Kinta – Kuala Kangsar எல்லையிலிருந்து தொடங்கி ,பேராக் Sungai Siput, Taman Makmur சந்திப்பில் முடிவடையும் சாலைக்கு , Tun Dr. S Samy Vellu என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.

கோலாலம்பூரில் உள்ள Jalan Ipoh அல்லது Jalan Raja Laut சாலையின் பெயர், மஇகாவின் நீண்ட கால தலைவரும், முன்னாள் பொதுப் பணி அமைச்சருமான சாமிவேலுவின் பெயருக்கு மாற்றப்பட வேண்டுமென , கடந்த செப்டம்பரில் அவரது முன்னாள் உதவியாளர் இ. சிவபாலன் புத்ராஜெயாவைக் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துன் சாமிவேலு, கடந்தாண்டு செப்டம்பரில் தமது 86 -வது வயதில் காலமானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!