ஈப்போ, ஆகஸ்ட் -10 – பேராக், உலு கிந்தாவில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது காதில் தோட்டா பட்டு Lans Koperal நிலையிலான 27 வயது போலீஸ்காரர் காயமடைந்தார்.
காதில் ரத்தம் வழிந்து மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்ற அவ்வாடவரின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில்
போலீஸ் இன்ஸ்பெக்டர் தவறுதலாக சுட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் (Datuk Azizi Mat Aris) கூறினார்.
1971 சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அச்சம்பவத்திற்கு பிறகு கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மாலை நேர பயிற்சிகள் தொடர்ந்தன.
அந்த துப்பாக்கி சுடும் பயிற்சியில் மொத்தம் 46 பேர் பங்கேற்றிருந்தனர்.