கோலாலம்பூர், ஆக 8 – பேராக் ,மாத்தாங்கில் (Matang) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோயிலுக்குள் புகுந்து தெய்வச் சிலையை உடைத்து சேதப்படுத்திய ஆயுதம் வைத்திருந்த இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை தண்டணை மற்றும் ஒரு பிரம்படி விதிப்பதாக செஷன்ஸ் நீதிமன்றம் தீர்பளித்தது. 24 வயதுடைய பிரடவுஸ் தவ்பிக் ( Firdaus Taufek ) என்பவன் சுத்தியல் மூலம் சிலையை உடைத்து நாசப்படுத்தியதோடு சட்டவிரோதமாக இரண்டு சுத்தியலை வைத்திருந்த குற்றச்சாட்டை செஷன்ஸ் நீதிபதி நபிஷா இப்ராஹிம் ( Nabisha Ibrahim ) முன்னிலையில் ஒப்புக்கொண்டான் என விசாரணை அதிகாரி சுடர்மணி (Sudermani) தெரிவித்தார். இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் குற்றச்சாட்டை மறுத்து அவன் விசாரணை கோரியிருந்தான். எனினும் நேற்றைய விசாரணையில் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவனுக்கு சிறை மற்றும் பிரம்படி விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.