
பேராக் சுல்தானை தமது Tik Tok காணொலியில் அவமதித்த மலேசியப் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது. கிள்ளானில் ஒரு கார் நிறுத்துமிட பகுதியில் 34 வயது அப்பெண் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த மே முதலாம் தேதி பேராக் சுல்தானை அவமதிக்கும் காணொலியை தமது tik tok கணக்கில் பதிவிட பயன்படுத்திய கைப்பேசியும் இரண்டு SIM கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டது தொடர்பில் நிந்தனைச் சட்டத்தின் கீழ் அப்பெண்ணை புகிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது. இன்று அவருக்கான தடுப்புக் காவல் நீதிமன்றத்தில் கோரப்படவுள்ளது.