Latestமலேசியா

பேராக் பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் அதிகரிப்பு

ஈப்போ, செப் 24- பேரா மாநிலத்திலுள்ள பள்ளிகளில் இவ்வாண்டு பகடிவதை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஜூலை மாதம் வரை பகடி வதை தொடர்பான 42 சம்பவங்கள் நடந்துள்ளதாக பேரா மாநில கல்வித் துறையின் புள்ளிவிவரங்கள் விவரிக்கின்றன. கடந்த ஆண்டு முழுவதும் பேரா பள்ளிகளில் பகடி வதை தொடர்பான இரண்டு சம்பவங்கள் மட்டுமே பதிவாகியதை ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பேரா போலீஸ் தலைவர் டத்தோ Mohd Yusri Hassan Basri தெரிவித்திருக்கிறார்.

இன்று காலை Anderson தேசிய இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற வேண்டாம் பகடிவதை (SAY NO TO BULLYING ) எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
சட்டத்திற்கு எதிராகவோ அல்லது பள்ளி விதிமுறைகளுக்கு எதிராகவோ மாணவர்கள் பகடிவதையில் ஈடுபட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் பெறும்பொருட்டு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு, மாநிலத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் பகடிவதை முற்றிலும் தடுக்க முடியும் என்பதை உறுதிச் செய்வதற்கு இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் என Mohd Yusri Hassan கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!