மஞ்சோங், ஏப்ரல் 8 – பேராக், மஞ்சோங்கில் உள்ள சீன கோவிலொன்றில் சிலைகளைச் சேதப்படுத்திய 35 வயது ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
Kampung Koh-வில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் சனிக்கிழமை இரவு அந்நபர் கைதானதாக மஞ்சோங் OCPD Asst Comm Mohamed Nordin Abdullah தெரிவித்தார்.
அந்நபரை விசாரணைக்குத் தடுத்து வைக்க ஏதுவாக நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என்றார் அவர்.
கோபத்தில் மலாயில் எதையோ பேசிக் கொண்டு, தனது கால்களால் அங்குள்ள சிலைகளை எட்டி உதைத்து சேதப்படுத்தியதை அவனே கைப்பேசியில் பதிவுச் செய்துள்ளான்.
அக்கைப்பேசியும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தியற்காக குற்றவியல் சட்டத்தின் கீழும், அதனைக் காணொலியாகப் பதிவுச் செய்து பகிர்ந்தற்காக தகவல்-பல்லூடகச் சட்டத்தின் கீழும் அவன் விசாரிக்கப்படுகிறான்.