Latestமலேசியா

பேராசிரியர் டாக்டர் ராமசாமிக்கு எதிரான ஸாகிர் நாயக் அவதூறு வழக்கு மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் நிதிக்கு இதுவரை ரி.ம 104,719.96 திரண்டது

கோலாலம்பூர், நவ 3 – பினாங்கு முன்னாள் முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமிக்கு எதிராக சர்ச்சைக்குரிய சமய போதாகர் ஸாகிர் நாயக் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் அவருக்கு 1.52 மில்லியன் ரிங்கிட்டை ஒரு மாதத்திற்குள் ராமசாமி வழங்க வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சமூதாயத்திற்காக குரல் கொடுத்த ராமசாமிக்கு உதவும் பொருட்டு மலேசிய தமிழர் உதவும் குரல் இயக்கம் அவரது வழக்கிற்காக பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் நடவடிக்கையை நேற்று தொடங்கியது.

அந்த வகையில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிதிக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 719 ரிங்கிட் 96 சென் திரண்டுள்ளது.

இந்த நிதிக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் CIMB வங்கியில் 800 895 3145 என்ற எண்களில் நிதியை செலுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!