ஈப்போ, பிப் 23 – நாடு முழுவதிலும் கோவிட் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பேராவில் அரசாங்க நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநில பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பேரா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ சரானி முகமட் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
எனினும் அவசர உதவி தொகை வழங்குவது, கோவிட் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் போடும் நடவடிக்கை தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.