ஈப்போ, மே 5 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறு ரக விமானம் ஒன்று இன்று Sungkai , Ladang Besaut 2 Tambahanனில் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை பேரா போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ Mohd Yusri Hassan Basri உறுதிப்படுத்தினார்.
அந்த விமானத்தில் இருந்த பயிற்சி விமானியும் அதிலிருந்த மற்றொரு நபரும் பாதுகாப்புடன் இருப்பதாக அவர் கூறினார். இன்று காலை மணி 9.55 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தைத் தொடர்ந்து அதிலிருந்த ஒரு ஆடவரும் ஒரு பெண்மணியும் Slim River மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை அந்த விமானத்தின் வகையை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னதாக அந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனிடையே இச்சம்பவம் குறித்து விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என மலேசிய பொது விமானத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.